Paramacharya

Paramacharya

ஊத்துக்காடு சிவன் கோவில்

ஊத்துக்காடு சிவன் கோவில்

அமைவிடம் கோயிலூர் நகரமாக விளங்கும் காஞ்சியின் கிழக்கு பகுதியில் சுமார் 15 மயில் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்பூதிலிருந்து வாலாஜாபாத்துக்கு செல்லும் சாலையில் வாலாஜாபாதிலிருந்து சுமார் 3 கல் தொலைவில் ஊத்துக்காடு என்கின்ற சிற்றூர் அமைந்துள்ளது.

கோவிலின் பழமையும் கல்வெட்டுக்கள் சான்றும் சுமார் 1200 வருடங்களுக்கு முன்பு பல்லவ வேந்தர்கள் தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை 18 கோட்டங்களாக பகுத்தனர். அவற்றுள் ஊத்துக்காடும் ஒரு கோட்டமாக விளங்கியது. இவ்வூத்துக்காடு கோட்டத்தில், பல்லவ மன்னர்களின் கலை நுட்ப கோயில்களில் இச்சிவ ஆலயமும் ஒன்றாகும். இதற்க்கு உண்டான கல்வெட்டு சான்றில், இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கம்பவர்மன் மன்னரால் கட்டப்பட்டது ஆகும். கம்பவர்மன், கோயில் சிவகார்யம் செய்து வந்த திருநாமக்கிழவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.இக்கோயிலில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் மூன்று பெரிய நந்தா விளக்குகள் ஏற்றி அவை அர்த்த சாமம் வரை எரிவிக்க செய்பவர்களுக்கு பொன்னும் பொருளும் நிலமும் வழங்கினார். அப்படி வழங்கிய நிலத்துக்கு திருநாமக்காணி என்று பெயர். இது கல்வெட்டு சான்றாகும்.

இக்கோயில்நந்தி மண்டபம், மஹா மண்டபம், அர்தமண்டபம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, சண்டிகேஸ்வரரின் சன்னதி, மிகப்பெரிய விமானமும், கலை நுட்பங்களுடன் கூடிய அழகிய தூண்களும், மணிமண்டபமும் தன்னகத்தே கொண்டு ஒரு பெரிய கோவிலாக விளங்கியிருக்கிறது.

இன்றைய நிலை
இவ்வாறு எழில் மிகுந்து இருந்த இத்திருத்தலம் சிதிலமடைந்து இறைவன் திருமேனி மண்ணில் மறைந்து இருந்தது. ஒரு நாள் 1.08.08 அன்று விளையாடி கொண்டு இருந்த விடலைகளின் நெஞ்சில் ஈசன் ஊன்றி அவர்கள் மூலமாக மண்ணில் இருந்து இறைவன் திருமேனி கண்டறியப்பட்டது. இவை அனைத்தும் ஈசன் சித்தமாகும்.

Tuesday, July 20, 2010

Click here for Balalayam Photos

No comments:

Post a Comment